Home இலங்கை குற்றம் சுகாதாரமற்ற முறையில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சி: நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு

சுகாதாரமற்ற முறையில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சி: நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு

0

மட்டக்களப்பு(Batticaloa) நகரிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் சுத்தமற்ற முறையில் கோழி இறைச்சியை சமைத்தமைக்காக
10 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவினை மட்டக்ளப்பு நீதிமன்ற நீதவான் நேற்று (04.07.2024) பிறப்பித்துள்ளார்.

உணவகத்திற்கு எதிராக முறைப்பாடு

குறித்த உணவகத்தில் சம்பவதினமான கடந்த மாதம் 25 ஆம் திகதி சித்தாண்டி பகுதியைச்
சேர்ந்த ஒருவர் கோழி கறியை வாங்கிச் சென்று அதனை சாப்பிட எடுத்தபோது
அதில் கோழியின் கல்லீரல் பகுதியை வெட்டி சுத்தம் செய்யாது மண்ணுடன் அப்படியே
கறி சமைத்து வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கோழி கறியை வாங்கிய நபர் அந்த உணவகத்திற்கு சென்று கறியில் மண்ணுள்ளமையை
தெரிவித்து அதனை பொது சுகாதார அதிகாரிகளிடம் வழங்கி
உணவகத்திற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

வழக்கு விசாரணை

இது தொடர்பாக அந்த உணவக சமையல் பகுதிக்கு பொறுப்பாளர் பொது சுகாதார
பணிமனைக்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் நேற்று(04)
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார அதிகாரிகள்
வழக்கு தாக்குதல் செய்துள்ளனர்.

இதையடுத்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் குறித்த நபருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version