Home இலங்கை வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிலங்கா விமானம்

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிலங்கா விமானம்

0

அவுஸ்திரேலியாவின் (Australia) மெல்பேர்ணிலிருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விமானம் நேற்று (04) இந்தோனேசியாவின் (Indonesia) ஜகார்த்தாவில் (Jakarta) தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ காரணம்

“UL605” எனப்படும் இந்த விமானத்தினுள் ஏற்பட்ட அவசர மருத்துவ காரணத்திற்காகவே இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், குறித்த மருத்துவ காரணம் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version