Home இலங்கை அரசியல் மோடியை சந்தித்த மலையக தமிழ் அரசியல்வாதிகள்

மோடியை சந்தித்த மலையக தமிழ் அரசியல்வாதிகள்

0

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi) மலையக தமிழ் அரசியல்வாதிகள் சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் மோடி தெரிவித்துள்ளதாவது, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் 

இந்த சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர்.

இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும். என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version