Home உலகம் பாப்பரசரின் இறுதி ஆராதனை – சற்றுமுன் வெளியான திகதி

பாப்பரசரின் இறுதி ஆராதனை – சற்றுமுன் வெளியான திகதி

0

புதிய இணைப்பு

நித்திய இளைப்பாறிய போப் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு (உள்ளூர் நேரம்) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடைபெறவுள்ளது.

வத்திக்கான் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (Pope Francis) மரணத்திற்கு முதல் நாள் காசா எல்லையில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் (Easter) திருநாளையொட்டி மக்களை நேரடியாக சந்தித்த போதே போப் பிரான்சிஸ் இதனை கூறியுள்ளார்.

வாடிகன் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து நேற்று(20) ஈஸ்டர் செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

போப் பிரான்சிஸின் இறுதி உரை

உலக அமைதியை வலியறுத்திய அவரது உரையில், காசாவின் நிலைமை பரிதாபகரமானது. பசியால் வாடும் மக்களுக்கு உதவ நாம் முன்வர வேண்டும். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் துன்பப்படும் மக்களுடன் தனது எண்ணங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

அத்துடன், காசா எல்லையில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என முறையிடுவதாகவும், பிணைக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்று சேர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

88 வயதான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவு காரணமாக 38 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து திரும்பியிருந்த நிலையில்,
வத்திக்கானில் காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.

https://www.youtube.com/embed/JBBxWR3mK8U

NO COMMENTS

Exit mobile version