Home இலங்கை அரசியல் சஜித் அணியில் இருந்து ரணில் பக்கம் தாவும் உறுப்பினர்கள்

சஜித் அணியில் இருந்து ரணில் பக்கம் தாவும் உறுப்பினர்கள்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் பெலியத்தைத் (Beliatta) தேர்தல் தொகுதி அமைப்பாளர் அக்கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது. 

இவர், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் அங்கத்துவத்தை நேற்று (18.04.2024) பெற்று கொண்டுள்ளார். 

முன்னாள் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய நந்தன அத்தபத்துவின் மகன், பிரவீன் ருவிந்த அத்தபத்து ஐக்கிய மக்கள் சக்தியின் பெலியத்தைத் தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளராக செயற்பட்டு வந்திருந்தாா். 

ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் கைது

கட்சிக்கான அங்கத்துவம் 

இந்நிலையிலேயே, அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவிடம் (Vajira Abeywardena) கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாய அமைச்சு எடுத்துள்ள புதிய நடவடிக்கை

ஈழத் தமிழ் உறவுகளுக்கும் இடையில் மோதலை தோற்றுவிக்கும் ரோ அமைப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version