Home அமெரிக்கா அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை

0

டிக் டொக் (Tik Tok) செயலிக்கு தடை விதிப்பதற்கு அமெரிக்காவின் (US) உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இத்தடையை நிறைவேற்ற கூடாது என கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மனு தாக்கல் 

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கு பிறகு, தற்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் டிக்டொக் குறித்து எவ்வாறான நடவடிக்கை எடுப்பார் என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த தடை குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பினை புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் ஒப்படைப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்காவில், டிக்டாக் செயலிக்கு கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் பாவனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version