Home முக்கியச் செய்திகள் பலாலியில் தரையிறங்கிய அமெரிக்க விமானங்களின் இரகசிய வேவு

பலாலியில் தரையிறங்கிய அமெரிக்க விமானங்களின் இரகசிய வேவு

0

நாட்டில் டித்வா புயலின் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அமெரிக்காவின் இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் கட்டுநாயக்கவில் தரையிறங்கியது.

இதனுடன் பலாலியில் இதுவரை அதிகம் தரையிறங்காத C130 ரக பெரிய சூப்பர் ஹெர்குலிஸ் சரக்கு விமானங்களும் தரையிறங்கி இருந்தன.

இந்தநிலையில், பேரிடர் காலத்தில் விமானமானது எங்கும் தரையிறங்கலாம் என்ற அடிப்படையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், கனரக விமானங்கள் இறங்க முடியாத பலாலி விமான நிலையத்தில் இது எப்படி சாத்தியம் என்ற அடிப்படையிலும் கேள்விகள் எழும்பியுள்ளது.

இந்த விமான தரையிறக்கத்தில் இந்தியாவிற்கும் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையில் சர்வதேச ரீதியில் சில அரசியல் நகர்வுகள் தங்கியுள்ளது எனவும் கருதப்படுகின்றது.

இவ்வாறு, இந்த நடவடிக்கையில் தங்கியுள்ள அரசியல், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் சர்வதேச அரசியல் இலங்கை மீது செலுத்தும் தாக்கம் என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசியின் இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி, 

https://www.youtube.com/embed/X1BoeQgoZN4

NO COMMENTS

Exit mobile version