Home இலங்கை பொருளாதாரம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள அமெரிக்க டொலர்கள்!

அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கைக்கு கிடைக்கவுள்ள அமெரிக்க டொலர்கள்!

0

அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நிதியுதவி செய்யவுள்ளதாக உலக வங்கி உறுதியளித்ததாக உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் ஜோஹன்னஸ் ஜூட் கூறியுள்ளார்.

உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் ஜோஹன்னஸ் ஜூட், இலங்கைக்கான
தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை நிறைவு செய்துக்கொண்டார்.

நிதியுதவி 

தனது இரண்டு நாள் பயணத்தின் போது, ​​அவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க உட்பட்ட அதிகாரிகளைச் சந்தித்தார்.

கடந்த மே மாதம் உலக வங்கி குழு (WBG) தலைவர் அஜய் பங்காவின் வருகையை
அடிப்படையாகக் கொண்டு இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க
டொலர்களுக்கு மேல் நிதியுதவி செய்யவுள்ளதாக வங்கி உறுதியளித்ததாக ஜுட்
கூறியுள்ளார்.

அத்துடன், சுற்றுலா, பிராந்திய மேம்பாடு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்
அபிவிருத்திகள், டிஜிட்டல் மேம்பாடு ஆகியவற்றில் அடுத்த 12 மாதங்களில்
கூடுதல் செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version