Home உலகம் அமெரிக்காவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு ட்ரம்பின் அதிரடி உத்தரவு

அமெரிக்காவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு ட்ரம்பின் அதிரடி உத்தரவு

0

அமெரிக்காவிலுள்ள (United States) நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்களை வெளியேறுமாறு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச மாணவர்களுக்கான F-1 visa ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு குறித்த நடவடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க வெளிவிவகாரத்துறையில் இருந்து மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசவிரோத நடவடிக்கை

தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டு பல சர்வதேச மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுவது குறித்து அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிவிப்பை அடுத்தே, தற்போது மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

300 மாணவர்களுக்கு மேல் முதற்கட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

விதிகளை மீறும் மாணவர்கள்

ஒரேயடியாக 300 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் மாணவர்கள் மற்றும் சுற்றுலாவுக்கு வந்தவர்களும் உட்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மின்னஞ்சல் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் அனைவரும் தாமாகவே நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் குற்றவாளிகள் போல நாடு கடத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version