Home முக்கியச் செய்திகள் அமெரிக்க கடவுச்சீட்டுடன் கைதான வெளிநாட்டவர்: பின்னணியில் இருந்த காரணம்

அமெரிக்க கடவுச்சீட்டுடன் கைதான வெளிநாட்டவர்: பின்னணியில் இருந்த காரணம்

0

விசா நிபந்தனைகளை மீறி 10 மாதங்களுக்கும் மேலாக அமெரிக்க கடவுச்சீட்டுடன் இலங்கையில் தங்கியிருந்த  வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, கண்டி காவல்துறை தலைமையகத்தின் சுற்றுலா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 2023 டிசம்பர் 31 ஆம் திகதி இலங்கைக்கு வந்து கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

அவரது விசா 30 மார்ச் 2024 அன்று காலாவதியாகியுள்ள நிலையில்,  அந்த நபர் தனது விசாவை நீட்டிக்காமல் – புதுப்பிக்காமல்  இலங்கை பெயர் கொண்ட அமெரிக்க கடவுச்சிட்டுடன் நாட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் தனது மடிக்கணினியுடன் அதிக நேரம் ஹோட்டல் அறைக்குள்ளேயே இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version