விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி, ஒரு இசையமைப்பாளராக களமிறங்கி நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
இசையமைப்பாளராக மட்டும் ஏன் இருக்க வேண்டும் என பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமையை வெளிக்காட்டி சாதனை செய்து வருபவர்.
இவர் இப்போது படங்களில் நடிப்பது, இசையமைப்பதை தாண்டி நிறைய இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
விஜய் டிவியின் செல்லம்மா சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. அழகிய ஜோடியின் போட்டோ
அண்மையில் சென்னையில் நடக்க இருந்த இசைக் கச்சேரி சில காரணங்களால் ரத்தானது, புதிய தேதி விரைவில் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நடிகரின் பேட்டி
இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி ஒரு நிகழ்ச்சி மேடையில் பணம், குடும்பம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ஒரு மனுஷனுக்கு காசு இருக்கோ பணம் இருக்கோ, குடும்பம் பலமா இருந்தா அதுவே போதும்.
எவ்ளோ பணம் பொருள் இருந்தாலும் சிலருக்கு குடும்பம் இருக்காது, பணம் யாருக்கும் நிரந்தரம் இல்ல. 70, 80 வயதிற்கு பிறகு பணம் பிரயோஜனம் கிடையாது என கூறியுள்ளார்.
அவரின் இந்த பேட்டியை ரசிகர்கள் பலரும் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.