Home இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கப்பல்

0

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஒகேன் என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு இன்றையதினம் (21.08.2024) வருகை தந்த குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

யுஎஸ்எஸ் ஒகேன் என அழைக்கப்படும் இந்த கப்பல் 154 மீட்டர் நீளமுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிச்சர்ட் ரே

அத்துடன், குறித்த கப்பலில் 328 பணியாளர்கள் கடமையாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கடற்படைத் தளபதிகளில் ஒருவரான ரிச்சர்ட் ரேயின் (Richard Ray) தலைமையில் இந்தக் கப்பல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version