கிழக்கு பசிபிக் கடலில் வந்த கப்பலொன்றின் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்ப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் நடவடிக்கை
வெனிசுலாவில் இருந்து பசிபிக் மற்றும் கரீபியன் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தும் சம்பவத்திற்கு எதிராக ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர் என்ற பெயரில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு நிர்வாகம் கடும் நடவடிக்கையை எடுத்து வருகின்றது.
ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர் திட்டத்தின் கீழ் இந்தாண்டில் மட்டும் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் கப்பல்கள் மீது அமெரிக்க இராணுவம் 20 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 80 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், கிழக்கு பசிபிக் கடல் வழியாக கப்பலில் போதைப்பொருள் கடத்தி வருவதாக அமெரிக்க இராணுவத்திற்கு உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட இராணுவத்தினர், போதைப் பொருள் கடத்தி வந்த கப்பலை கண்டறிந்து தாக்குதலை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
