Home உலகம் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு: ஏவுகணை சோதனையில் அபார வெற்றி

அமெரிக்கா அதிரடி அறிவிப்பு: ஏவுகணை சோதனையில் அபார வெற்றி

0

ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்ய வேண்டியது அவசியம் என போர் துறைக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தநிலையில், ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள்

உலக நாடுகள் பலவும் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்க முடியாது என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், தன்னிடம் உள்ள ஆயுதங்களை அமெரிக்கா சோதனை செய்ய வேண்டும் என போர் துறைக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட் மேன் – 3 ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று (06)வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

அணு ஆயுதம்

அணு ஆயுதம் இன்றி இந்த சோதனை நடந்ததாக, அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் படைத்தளத்தில் இருந்து மார்ஷல் தீவுகளில் உள்ள இலக்கை நோக்கி ஏவப்பட்டுள்ளது.

இது வழக்கமாக நடத்தப்படும் சோதனை எனவும் மற்றும் முன்பே திட்டமிடப்பட்டது எனவும் தெரிவித்த விமானப்படை, டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கும் மற்றும் சோதனைக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version