Home இலங்கை அரசியல் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச ஆதரவை வரவேற்ற அமெரிக்கா

இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச ஆதரவை வரவேற்ற அமெரிக்கா

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீண்டகாலமாக தண்டனை வழங்கப்படுவதில்லை என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி, தூதுவர் மிக்கேல் டெய்லர், இதனை ஜெனீவாவில் கூறியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பணியை அமெரிக்கா பாராட்டுவதாகவும், பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதியை மேம்படுத்துவதற்கான சர்வதேச ஆதரவை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீண்டகால நிலையான வளர்ச்சி

இந்தநிலையில் ஊழலுக்கு எதிரான மற்றும் நீண்டகால நிலையான வளர்ச்சியில் அதிக வெளிப்படைத்தன்மையை ஒருங்கிணைக்க அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நில அபகரிப்புகளை நிறுத்தவும், நில ஒப்பந்தங்கள் தொடர்பான வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் அமெரிக்கா, இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

நடந்து வரும் சித்திரவதைகள் பற்றிய உயர்ஸ்தானிகரின் அறிக்கையால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது

இந்தநிலையில், சித்திரவதைகளுக்குத் தீர்வு காணவும், அதற்குப் பொறுப்பானவர்களை தண்டிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்துகிறது
மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நீண்டகாலமாக தண்டனை விதிக்கப்படாமல் இருப்பது நல்லிணக்கத்திற்கு தடையாக உள்ளது.

எனவே அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்கு உகந்த சூழலை வளர்க்கும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா அழைப்பு விடுப்பதாக தூதர் குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version