Home அமெரிக்கா அதிஸ்ட சீட்டிழுப்பில் உலகிலேயே அதிக தொகையை வென்றவரையும் விட்டுவைக்காத அமெரிக்க தீ

அதிஸ்ட சீட்டிழுப்பில் உலகிலேயே அதிக தொகையை வென்றவரையும் விட்டுவைக்காத அமெரிக்க தீ

0

உலகிலேயே அதிஸ்ட சீட்டிழுப்பில் அதிக பரிசு வென்றவரான எட்வின் கொஸ்ட்ரோ என்ற அதிஸ்டசாலியின் லொஸ் ஏஞ்சல்ஸ் வீடு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.

அதிஸ்ட சீட்டிழுப்பில் கிடைத்த பணத்தை கொண்டு அவர், லொஸ் ஏஞ்சல்சில் பிரம்மாண்ட சொகுசு மாளிகை ஒன்றை வாங்கியிருந்தார்.

இந்தநிலையில், பிரபலமானவர்கள் நிறைந்துள்ள இந்த பகுதியில் அமைந்திருந்த எட்வினின் வீடு காட்டுத்தீயில் முழுமையாக எரிந்துள்ளது.

பாரிய சேதங்களை விளைவித்துள்ளது..

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லொஸ் ஏஞ்சல்சில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி பாரிய சேதங்களை விளைவித்துள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரைப்பட நகரம் என்று அழைக்கப்படும் ஹொலிவுட் ஹில்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது.

கடந்த 7ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸின் பொலிசேட்ஸ் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது.

காட்டுத்தீயால் இதுவரை 12இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதை அடுத்து, ஆயிரக்கணக்கான கட்டுமானங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. 

லட்சக்கணக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். வீடுகளில் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் மேலும் பல லட்சம் மக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, குறிப்பாக, பொலிசேட்ஸ், ஈட்டன், அல்டாடெனா ஆகிய பகுதிகளில் ஆயிரக்ககணக்கான வணிக கட்டடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.

இதில், உலகிலேயே சீட்டிழுப்பில் அதிக தொகை வென்றவரான எட்வின் கொஸ்ட்ரோவின் வீடும் முற்றிலும் சேதம் அடைந்து இருக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற அதிஸட சீட்டிழுப்பில் எட்வின் கொஸ்ட்ரோவுக்கு பரிசு கிடைத்தது.

இதன் பெறுமதி, அமெரிக்க டொலர் மதிப்பில் 2.04 பில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 16,590 கோடி ரூபாய்களாகும்.

இதனைக்கொண்டே அவர் லொஸ் ஏஞ்சல்ஸில் 25.5 மில்லியன் டொலர் மதிப்பு கொண்ட சொகுசு பங்களா ஒன்றையும் வாங்கியிருந்தார்.

இதேவேளை, அமெரிக்காவின் முன்னணி நடிகர் – நடிகையர் வீடுகளும் தீயில் எரிந்துள்ளன.
இதற்கிடையில் தண்ணீர் பற்றாக்குறையால் தற்போது தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் தீயை அணைக்க போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்; என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version