Home இலங்கை சமூகம் சர்ச்சைக்குள்ளான அரச ஊழியர்களின் செயற்பாடு: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

சர்ச்சைக்குள்ளான அரச ஊழியர்களின் செயற்பாடு: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

0

டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவது குறித்து விசாரணை நடத்தப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அலுவலக நேரத்தில் டிக்டோக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பான பல காணொளிகள் சுகாதார அமைச்சகத்திற்கு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

கடமைச் சட்ட மீறல்

அதன்படி, இந்த வகையான நடவடிக்கைகள் கடமைச் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு முரணானதா என்பதை விசாரிப்பதாகவும், தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறனாதொரு பின்னணியில், கடமை நேரத்தில் டிட்டோக் உட்பட பல சமூக ஊடகங்களில் தாதியர்கள் உள்ளிட்ட தரப்பினரின் பல்வேறு காணொளிகள் உலா வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version