Home இலங்கை அரசியல் வடிவேல் சுரேஷை வெளியேற்ற உத்தரவு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடிவேல் சுரேஷை வெளியேற்ற உத்தரவு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஹாலிஎல உனுகொல்ல பங்களாவை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு உனுகொல்ல தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று(10.12.2024) நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் கூறியுள்ளார்.

வடிவேல் சுரேஷை அங்கிருந்து வெளியேறாமல், அநீதியாக செயற்பட்டால் தோட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகள் 

இதேவேளை, மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க தலா 28 இலட்சம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய உதவியின் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதன்போது கூறியுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் அனைத்து பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version