Home முக்கியச் செய்திகள் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்ற வடிவேல் சுரேஷ்

இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்ற வடிவேல் சுரேஷ்

0

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவுக்கும் (Ali Zahir Moulana) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) பிற்பகல் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்னிலையில் அவர்கள் இருவரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நியமனக் கடிதங்கள்

அத்துடன் இவர்கள் இருவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து தத்தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை வடிவேல் சுரேஷ் பதுளை (Badulla)மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை (SJB) பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version