பல வழக்குகள் நிலுவையில் இருந்தபோது வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவுக்கு எவ்வாறு பதவி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வேட்பாளர்களிடம் உள்ள சிறிய குறைபாடுகளை கூட கண்டறிந்த கட்சி, ஆறு வழக்குகள் இருந்தபோதிலும், வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவுக்கு வேட்பாளர் பதவியை எவ்வாறு வழங்கியது என்று உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் குழு கட்சிதலைமையிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு பொறுப்பான கட்சிச்செயலாளர் இது தொடர்பாக தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.
லசந்த விக்ரமதுங்க மீது ஆறு வழக்குகள்
லசந்த விக்ரமதுங்க மீது ஆறு வழக்குகள் இருந்ததாகவும், போதைப்பொருள் தொடர்பான வழக்கில் அவருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை கூட விதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
லசந்த விக்ரமசேகரவுக்கு உள்ளூராட்சி மன்ற வேட்புமனு வழங்கப்பட்டபோது, இந்த வழக்குகள் குறித்து அவருக்கு தெரியாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், கட்சி இது தொடர்பாக முறையான விசாரணையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த பிரதிநிதிகள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பில் விவாதிக்கவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
