Home இலங்கை அரசியல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளமாக 2,500 ரூபா அவசியம் – ஐக்கிய சோஷலிசக் கட்சி வலியுறுத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளமாக 2,500 ரூபா அவசியம் – ஐக்கிய சோஷலிசக் கட்சி வலியுறுத்து

0

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 2 ஆயிரத்து 500 ரூபா
வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க
ஜயசூரிய வலியுறுத்தினார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள சூழ்நிலையில் நாள் சம்பளமாக ஆயிரத்து 700
ரூபாவை நிர்ணயிப்பது அநீதி எனவும் ஊடகங்களிடம் அவர் சுட்டிக்காட்டினார்.

2,500 ரூபா 

மலையக மக்களுக்கு காகிதங்களை வழங்கிக்கொண்டிருக்காமல், காணி உரிமையை
வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் தனது
பாதீட்டு உரையில் ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சிறிதுங்க ஜயசூரிய
மேலும் குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version