Home சினிமா பிரம்மாண்டமாக நடந்த வாரணாசி டைட்டில் வெளியிட்டு விழாவுக்கு செலவு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா!

பிரம்மாண்டமாக நடந்த வாரணாசி டைட்டில் வெளியிட்டு விழாவுக்கு செலவு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா!

0

வாரணாசி 

கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ராஜமௌலி – மகேஷ் பாபு படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளிவந்தது. வாரணாசி என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த டைட்டில் டீசரை வெளியிடுவதற்காக மிகவும் பிரம்மாண்டமான முறையில் ராமாஜிராவ் ஸ்டூடியோவில் விழா நடைபெற்றது. “பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் வாரணாசி படத்தின் டைட்டில் டீசர் வெளிவந்து மாஸ் வரவேற்பை பெற்றது.

2025ஆம் ஆண்டு இதுவரை தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்துள்ள படங்கள்.. டாப் 10 லிஸ்ட்

இத்தனை கோடி செலவா

இந்த நிலையில், வாரணாசி டைட்டில் டீசரை வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவிற்காக ரூ. 15 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் எடுக்கும் பட்ஜெட்டில் இவர்கள் ஒரு விழாவை நடத்தியுள்ளனர் என பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

மகேஷ் பாபு – ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். 2027ஆம் ஆண்டு சம்மருக்கு இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version