Home முக்கியச் செய்திகள் யாழில் தொடருந்து மோதி ஆண் பரிதாபமாக பலி – மரணத்தில் சந்தேகம்

யாழில் தொடருந்து மோதி ஆண் பரிதாபமாக பலி – மரணத்தில் சந்தேகம்

0

யாழ்ப்பாணம் (Jaffna) நகர பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (18.11.2025) காலை 6.50 மணியளவில் யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் பகுதியை சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

விபத்தா அல்லது உயிர்மாய்ப்பு

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை நோக்கி சென்ற யாழ்தேவி தொடருந்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இறப்பு சம்பவம் விபத்தா அல்லது உயிர்மாய்ப்பா என்பது தொடர்பாக யாழ்ப்பாணம்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

[UWIVJSD
]

NO COMMENTS

Exit mobile version