Home சினிமா மதுரையில் நடந்த கட்சி மாநாடு, அது பார்க்கும் போது கவலையா இருக்கு… பிரபல இயக்குனர்

மதுரையில் நடந்த கட்சி மாநாடு, அது பார்க்கும் போது கவலையா இருக்கு… பிரபல இயக்குனர்

0

விஜய் மாநாடு

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் தனது அப்பாவின் மூலம் என்ட்ரி கொடுத்தாலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர்.

படத்திற்கு படம் பல கோடி சம்பளமும், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனையும் காட்டி வந்தவர் இப்போது சினிமாவை விட்டே விலக இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய இதுவரை 2 மாநாடுகளை நடத்திவிட்டார்.

இதில் விஜய்யின் மதுரை மாநாடு பற்றி மக்களாலும், பிரபலங்களாலும் நிறைய பேசப்பட்டது.

இயக்குனர்

விஜய் ஆண்டனி தயாரிப்பில் பூக்கி என்ற திரைப்படம் தயாராகிறது, இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் வசந்த பாலன், நடிகர் விஜய் பெயரைக் குறிப்பிடாமல் அவரது அரசியல் கட்சியில் மதுரை மாநாட்டை கடுமையாக விமர்சித்து பேசினார்.

சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டைப் பார்த்தேன், மாநாட்டை பார்த்தபோது மாநாட்டிற்கு வந்த இளைஞர்கள் அரசியல் படுத்தப்படாமல் இருக்கிறார்கள். வெயிலில் கருகி சாகிறார்கள், மேடையில் தூக்கி வீசப்படுகிறார்கள்.

அதை பார்க்கும் போது மிகவும் கவலை அளிக்கும் படியாக இருந்தது. ஏதோ ஒரு விதத்தில் இந்த இளைஞர்களை நாம் கவரத் தவறி விட்டோம் என்று தோன்றியது.

அந்த இளைஞர்களை அரசியல் படுத்தத் தவறிவிட்டோம், அவர்களின் குரலை பேச தவறி விட்டோம் என தோன்றியதாக கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version