முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார காலமானதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
எனினும் இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியம்
இன்று காலை தான் விழித்தெழுந்து தேநீர் அருந்தி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
நேற்று முதல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார காலமானதாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அத்துடன் அதில் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என பலரும் அனுதாபம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
