Home இலங்கை சமூகம் ரணில் அரசாங்கத்திற்கு பெருகும் மக்களின் ஆதரவு: ஆய்வில் வெளியான தகவல்

ரணில் அரசாங்கத்திற்கு பெருகும் மக்களின் ஆதரவு: ஆய்வில் வெளியான தகவல்

0

நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைமையை ஒப்பிடும்போது, ​​அரசின் திட்டங்களை மூன்று மடங்கு அதிகமான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக என்று வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் (Verité Research) சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

2024 பெப்ரவரியில் 7 சதவீதமாக இருந்த அரசாங்கத்தின் மீதான மக்களின் ஒப்புதல் 24 சதவீதமாக, அதாவது மூன்று மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 28 சதவீதம் பேர் தற்போதைய பொருளாதார நிலையை நல்லது மற்றும் சிறப்பானது என வகைப்படுத்தியுள்ளனர், இது கடந்த பெப்ரவரி மாதம் இருந்த 9 சதவீத எண்ணிக்கையிலிருந்து மூன்று மடங்கு அதிகமாகும்.

நேர்மறையான கருத்து

இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என்று நம்பும் மக்களின் பங்கும் மும்மடங்கு அதிகரித்து 30 சதவீதத்தல் காணப்படுகிறது. கடந்த பெப்ரவரி மாதம் 9 சதவீத மக்கள் மட்டுமே அவ்வாறு எதிர்பார்த்துள்ளனர்.

இந்த முடிவுகளை முன்வைத்து, வெரிட்டி ரிசர்ச் நிறுவனம், ஜூலை 2024 இல் காணக்கூடிய இந்த நேர்மறையான திருப்பம் ஜூன் 2023 இல் இருந்த அளவிலும், ஜனவரி 2022 க்குப் பிறகு, ஜூன் மாதத்தில் நாடு, அரசாங்கம் மற்றும் பொருளாதாரம் குறித்து பெரும்பாலான மக்கள் நேர்மறையான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version