Home சினிமா திட்டமிட்டு குறைக்கப்பட்டதா வேட்டையன் அமெரிக்கா வசூல்.. கடும் அதிருப்தியில் ரஜினி ரசிகர்கள்

திட்டமிட்டு குறைக்கப்பட்டதா வேட்டையன் அமெரிக்கா வசூல்.. கடும் அதிருப்தியில் ரஜினி ரசிகர்கள்

0

வேட்டையன்

கடந்த வாரம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது வேட்டையன். TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

உலகளவில் 4 நாட்களில் ரூ. 200 கோடியை இப்படம் கடந்துள்ளது.

ரஜினிகாந்த் படம் என்றால் முக்கிய இடங்களில் வசூல் மாபெரும் அளவில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

அப்படி ரஜினிகாந்த் வசூல் சாதனை படைத்த இடங்களில் ஒன்று வட அமெரிக்கா. ஆம், வட அமெரிக்காவில் ஜெயிலர் திரைப்படம் 7.5 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளது.

4 நாட்களில் உலகளவில் வேட்டையன் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

இன்று வரை தமிழில் வெளிவந்த எந்த படமும் அந்த வசூல் சாதனையை முறியடிக்கவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் 4 நாட்களில் 2.4 மில்லியன் டாலர்கள் மட்டுமே வசூல் செய்துள்ளது.

திட்டமிட்டு வசூல் குறைக்கப்பட்டதா

ஆனால், இதற்கு ரசிகர்கள் கூறும் காரணம், வேட்டையன் படத்தை திட்டமிட்டே வட அமெரிக்காவில் சரியாக ரிலிஸ் செய்யாமல், வசூலை குறைத்துவிட்டனர், விநியோகஸ்தர் ஒரு விஜய் ரசிகர் அதனால் தான் அப்படி செய்துவிட்டார் என கூறிவருகின்றனர்.

மேலும், தெலுங்கு விமர்சனம் பார்த்து அதிக காட்சிகள் திரையிடலாம் என விநியோகஸ்தர் சொன்னார், யாராவது இப்படி செய்வார்களா, ரஜினிக்கு தெலுங்கு ரசிகர்கள் அதிகம், ஜெய்லர் வட அமெரிக்காவில் தெலுங்கு வெர்ஷனே கோடி கணக்கில் வசூல் செய்தது, அப்படியிருக்க, எப்படி விநியோகஸ்தர் இந்த மாதிரி சொல்லலாம் என ரஜினி ரசிகர்கள் கோபப்பட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் விநியோகஸ்தர் மிக கோபமாக, நான் பணம் போட்டவன் நானே இப்படி ஏன் செய்ய வேண்டும், ஆம், நான் பெருமையாக சொல்வேன் விஜய் ரசிகன் என, ஆனால், அதற்காக இப்படிப்பட்ட வேலையை நான் ஒரு போதும் செய்வது இல்லை, நான் தொடர்ந்து என் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்று கடுமையாக பதில் அளித்திள்ளார்.

NO COMMENTS

Exit mobile version