Home சினிமா 12 நாட்களில் உலகளவில் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

12 நாட்களில் உலகளவில் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

வேட்டையன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 10 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் வேட்டையன்.

இப்படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கியிருந்தார். மேலும் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

27 ஆண்டுகளுக்கு பின் மருதநாயகம் படத்தை மீண்டும் இயக்கும் கமல் ஹாசன்.. எதிர்ப்பார்பில் ரசிகர்கள்

வசூல் 

இந்த நிலையில், உலகளவில் வேட்டையன் படம் 12 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையன் பத்ம 12 நாட்களில் உலகளவில் ரூ. 241 கோடி வசூல் செய்துள்ளது.

முதல் வாரம் இப்படத்தின் வசூல் அதிகரித்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் இருந்து வசூலில் பின்னடைவை வேட்டையன் படம் சந்தித்துள்ளது என கூறுகின்றனர். ஆனாலும், கூட வேட்டையன் தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாக அமைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version