Home சினிமா விடாமுயற்சி ப்ரீ புக்கிங் வசூல்.. வெளிநாட்டில் மாஸ் காட்டும் அஜித்

விடாமுயற்சி ப்ரீ புக்கிங் வசூல்.. வெளிநாட்டில் மாஸ் காட்டும் அஜித்

0

விடாமுயற்சி

மகிழ் திருமேனி – அஜித் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. ஆங்கிலத்தில் வெளிவந்த பிரேக் டவுன் படத்தின் ரீமேக் தான் இப்படம். வருகிற 2025 பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் விடாமுயற்சி படத்தை ஆவலுடன் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

துணிவு படத்திற்கு பின் இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை முழுமையாக திருப்பிதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் எடுத்த அதிரடி முடிவு.. மீண்டும் ஆதிக் உடன் கூட்டணி! உருவாகும் மார்க் ஆண்டனி 2

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ப்ரீ புக்கிங் வசூல்

இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாட்டில் துவங்கிய நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

ரிலீஸுக்கு இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில், வெளிநாட்டில் துவங்கிய ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 16.5 லட்சம் வரை விடாமுயற்சி படம் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாஸ் ஓப்பனிங் என கூறப்படுகிறது.Z

NO COMMENTS

Exit mobile version