SA சந்திரசேகர்
வெள்ளித்திரையில் நடிக்க ஆர்வம் காட்டுபவர்களை தாண்டி சின்னத்திரையில் களமிறங்க ஆசைப்படும் கலைஞர்கள் அதிகமாகிக்கொண்டு வருகிறார்கள்.
படங்களை விட சீரியல்கள் தான் இப்போது மக்களை வெகுவாக கவர்கிறது. எனவே நிறைய புதுமுக நடிகர்கள் சின்னத்திரை பக்கம் அதிகம் வருகிறார்கள்.
எஸ்.ஏ.சந்திரசேகர்
நிறைய வெற்றிகரமான படங்கள் இயக்கி தனது மகனையும் சினிமாவில் களமிறக்கி இப்போது தமிழ்நாடே கொண்டாடும் நாயகனாக வளர்ந்து நிற்கும் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இப்போது சின்னத்திரையில் களமிறங்கியுள்ளார்.
பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?- ஓட்டிங் விவரம் இதோ
விஜய் டிவியில் கிழக்கு வாசல் தொடரில் நடிக்க தொடங்கினார், அந்த தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது புதிய தொடர் ஒன்றில் களமிறங்கியுள்ளார், இந்த தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.