Home இந்தியா அஜித்குமாரின் கொடூர கொலை: அதிரடியாக போராட்ட களத்தில் குதித்த விஜய்

அஜித்குமாரின் கொடூர கொலை: அதிரடியாக போராட்ட களத்தில் குதித்த விஜய்

0

காவல்துறை விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக, தவெக தலைவர் விஜய் (Vijay) தலைமையில், சென்னையில் இன்று (13.07.2025) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறுகின்றது.

அஜித்குமார் உயிரிழப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த கோரியும், காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் தலைமையில் நடைபெறும் முதல் போராட்டம் என்பதால் இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த நான்கு ஆண்டுகளில் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் இதில் கலந்துக்கொள்கிறார்கள். 

சென்னை சிவானந்தா சாலையில் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணிக்குள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/XfJFjjEmiAI

NO COMMENTS

Exit mobile version