Home சினிமா ஜோசியத்தில் விஜய் இழந்த சூப்பர்ஹிட் படம்.. அவருக்கு பதில் யார் நடித்தது தெரியுமா

ஜோசியத்தில் விஜய் இழந்த சூப்பர்ஹிட் படம்.. அவருக்கு பதில் யார் நடித்தது தெரியுமா

0

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். அவரது படங்கள் மிகப்பெரிய பிஸ்னஸ் செய்கின்றன, அதனால் அவர் தற்போது அரசியலில் நுழைந்த காரணத்தால் படங்களில் இனி நடிக்க மாட்டேன் என கூறி இருப்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தான் கொடுத்து இருக்கிறது.

விஜய் தனது கெரியரில் பல படங்களில் மிஸ் செய்து இருக்கிறார். மற்ற நடிகர்கள் நடித்து மிகப்பெரிய ஹிட்டும் ஆகி இருக்கின்றன. உள்ளதை அள்ளித்தா படமும் அப்படி ஒன்று தான்.

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

உள்ளித்தை அள்ளித்தா

சுந்தர் சி இயக்கத்தில் 1996ல் கார்த்திக் – ரம்பா நடிப்பில் வந்து மிகப்பெரிய ஹிட் படம் உள்ளத்தை அள்ளித்தா. அதில் கவுண்டமணி, செந்தில், மணிவண்ணன் ஆகியோரும் நடித்து இருந்தனர்.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் முதலில் விஜய்யை நடிக்க வைக்க தான் சுந்தர்.சி அணுகினாராம். அந்த படத்தின் தயாரிப்பாளர் ஜோசியம் மீது அதிகம் நம்பிக்கை கொண்டவராம், ஜோசியர் சொன்னது போல 1996 ஜனவரி 15ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக வேண்டும் என கூறினாராம்.

ஆனால் ஏற்கனவே விஜய் நடித்த கோயம்பத்தூர் மாப்பிள்ளை படமும் அதே தேதியில் தான் ரிலீஸ் ஆக இருக்கிறது, அதனால் வேறு தேதிக்கு ரிலீஸ் மாற்றினால் விஜய்யை நடிக்க வைப்பதாக அப்பா எஸ்ஏசி கூறினாராம்.

தேதியை மாற்ற முடியாது என உள்ளதை அள்ளித்தா தயாரிப்பாளர் உறுதியாக இருந்ததால் விஜய்க்கு பதில் கார்த்திக்கை நடிக்க வைத்து அந்த படத்தை ரிலீஸ் செய்தனர். படமும் மிகப்பெரிய ஹிட் ஆனது. 

அந்த படத்தில் வரும் அழகிய லைலா பாடலுக்கு ரம்பா ஆடிய டான்ஸ் எவ்வளவு பெரிய ஹிட் என்பதும் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

NO COMMENTS

Exit mobile version