Home சினிமா என்னை திட்ராங்க.. அர்ச்சனா பற்றி மறைமுகமான பிக் பாஸில் அருணிடம் பேசிய விஜய் சேதுபதி

என்னை திட்ராங்க.. அர்ச்சனா பற்றி மறைமுகமான பிக் பாஸில் அருணிடம் பேசிய விஜய் சேதுபதி

0

பிக் பாஸ் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அவர் சில போட்டியாளர்களிடம் சார் சார் என பேசுகிறார். ஆனால் மற்ற சிலரை அசிங்கப்படுத்தும் வகையில் பேசுகிறார் என குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

குறிப்பாக பாரதி கண்ணம்மா நடிகர் அருண் பிரசாத்தை விஜய் சேதுபதி தொடர்ந்து அசிங்கப்படுத்தும் வகையில் பேசுவதாக வீடியோக்களும் வைரல் ஆனது.

அந்த வீடியோவை பதிவிட்டு, அருணின் காதலி என கூறப்படும், முந்தைய பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னருமான அர்ச்சனா இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டிருந்தார். அருண் பிர்சாத்துக்கு தான் ஆதரவு தருவதாக தெரிவித்திருந்தார்.

விஜய் சேதுபதி கமெண்ட்

சனிக்கிழமை எபிசோடில் போட்டியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி அருண் பிரசாத்திடம் ஒரு கேள்வியை கேட்டார்.

குங்குமப்பூ என கூறி நான் உங்களிடம் அப்படி பேசுவதாக வெளியில் திட்ராங்க, நான் பேசுவது உங்களுக்கு பிடிக்கவில்லையா என விஜய் சேதுபதி கேட்க..

இல்லை சேர் நீங்க அப்படியே கூப்பிடுங்க என அருண் பிரசாத் பதில் கூறினார். 

இருப்பினும் அருண் பிரசாத் வழக்கம் போல முத்து குமார் சொல்வதை கேட்டு தான் அனைத்தையும் செய்கிறார் என சற்று நேரம் கழித்து விமர்சித்தார் விஜய் சேதுபதி.

NO COMMENTS

Exit mobile version