Home இலங்கை அரசியல் 2005இல் ரணிலை நிராகரித்ததாலேயே இந்த நிலை – விஜயகலா மகேஸ்வரன்

2005இல் ரணிலை நிராகரித்ததாலேயே இந்த நிலை – விஜயகலா மகேஸ்வரன்

0

2005இல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்காமையாலேயே இத்தனை இழப்புக்களை சந்தித்தோம் என
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (21.08.2024) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊடகங்களுக்கு
கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 

“கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்த தலைவர்கள் எப்படி இந்த நாட்டை கொண்டு
சென்றிருக்கிறார்கள்.

வாக்களிக்க முடியாத சூழல்

கோவிட் மற்றும் பொருளாதாரத்தினால் வீழ்ச்சியைடைந்திருந்த இந்த நாட்டை கடந்த
இரண்டு வருடங்களில் எவ்வாறு மீட்டார் என்பதை இந்த நாடும் உலகமும்
அறிந்த பெருமைக்குரிய நல்ல தலைவராக ரணில் விக்ரமசிங்க உள்ளார்.

அது மாத்திரமல்ல, ஆசியாவிலேயே சிறந்த தலைவராக ரணில் விக்கிரமசிங்க விளங்குவதாக
அமெரிக்க தூதுவர் கூறியிருக்கின்றார்.

2005ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இன்றைய ஜனாதிபதிக்கு
வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. அன்று மக்கள் வாக்களித்திருந்தால்
இன்று எமது மக்கள் இழப்புக்களை சந்தித்திருக்க மாட்டார்கள்.

யுத்த இழப்புக்கள், உயிரிழப்புக்கள், சொத்து இழப்புக்களை தடுத்திருக்கலாம்.
அந்த பிழையை இனியும் விடாது அனைத்து தமிழ், முஸ்லிம், மலையக மற்றும் சிங்கள மக்களும் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version