Home இலங்கை அரசியல் தேர்தலில் போட்டியிடுவதில்லை – விமல் வீரவன்ச அதிரடி அறிவிப்பு

தேர்தலில் போட்டியிடுவதில்லை – விமல் வீரவன்ச அதிரடி அறிவிப்பு

0

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி கட்சி போட்டியிடாது என அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

அவரால் இன்றையதினம் (10.10.2024) வெளியிடப்பட்ட விசேட அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டுக்கு விரோதமான ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்யும் சில எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ‘இரண்டாம் கோட்டாபயவாக’ மாற்ற விரும்புகின்றன என்பதில் சந்தேகமில்லை என அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல்  

பொதுத் தேர்தலின் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது மேற்குறிப்பிட்ட நெருக்கடியை எதிர்கொள்ள முன்நிபந்தனையாகிறது.

இது அரசாங்கத்துடன் பிரிவினைவாத மற்றும் மத தீவிரவாத குழுக்களின் பேரம் பேசும் சக்தியை கட்டுப்படுத்துகிறது.

அங்கு அரசாங்கத்தில் உள்ள பிரதிநிதித்துவமற்ற சக்திகளும் எதிர்க்கட்சி எனப்படும் சக்திகளும் இரண்டு பாத்திரங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

விசேட அறிக்கை

தமது கட்சி அந்த கருத்துக்கு இடமளிக்காமல், நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ள அனுமதிக்காது எனவும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைப்பதற்காக தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவின்றி அநுர குமார திசாநாயக்க ஆட்சி புரியும் நிலையை ஏற்படுத்துவது தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச தனது விசேட அறிக்கையினை பிரதிகளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version