வன்முறை கும்பலால் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இத்தமல்கொட, கட்டஹட்ட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி – எஹெலியகொடகாவல்துறைபிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள தொடருந்து
கடவைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்
மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மூன்று பேர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்
வன்முறைக் கும்பல் ஒன்று மூன்று பேர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்
நடத்தியது.
காயமடைந்தவர்கள் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில்
ஒருவர் உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மற்றைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டனர்.
காவல்துறையினர் விசாரணை
உயிரிழந்த இளைஞரின் சடலம் எஹெலியகொட வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வது தொடர்பில்
எஹெலியகொட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
