Home முக்கியச் செய்திகள் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கன்னி சதத்தினை பூர்தி செய்த இலங்கை வீராங்கணை!

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கன்னி சதத்தினை பூர்தி செய்த இலங்கை வீராங்கணை!

0

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) போட்டிகளில்  இலங்கை (Sri Lanka) கிரிக்கெட் வீராங்கணை விஷ்மி குணரத்ன (Vishmi Gunarathne) தனது கன்னி சதத்தினை பதிவு செய்துள்ளார்.

பெல்பாஸ்டில் (Belfast) இன்று (16) நடைபெற்ற அயர்லாந்துக்கு (Ireland) எதிரான முதலாவது ஒருநாள் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்தியுள்ளார்.

அந்தவகையில், இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

இலங்கை வீராங்கணை

இந்த நிலையில், ஆரம்ப துடுப்பாட்ட வீரங்கணையாக சமரி அத்தப்பதுவுடன் (Chamari Athapathu) களமிறங்கிய விஷ்மி குணரத்ன 98 பந்துகளில் மூன்று 06 ஓட்டங்கள் மற்றும் ஒன்பது 04 ஓட்டங்கள் அடங்கலாக 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், இலங்கை அணி சார்பில் சமரி அத்தப்பதுவுக்து அடுத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்த இரண்டாவது இலங்கை வீராங்கணை என்ற பெருமையை விஷ்மி குணரத்ன தனதாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/vishmi-gunaratne-scores-maiden-odi-century-1723815805?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version