நாட்டினுடைய பாதுகாப்பை நாம் பகிடியான ஒரு விடயமாக எடுத்துக் கொள்ள
முடியாது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (26.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தப்படுவதற்கு முன்னர் பல சர்வதேச அமைப்புகளும்
புலனாய்வு அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்தன. சரியான முறையில் கருத்தில்
கொள்ளாததால் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது.
சர்வதேச அமைப்புக்கள்
ஆகவே, இவ்வாறான எச்சரிக்கைகள் வருகின்ற போது, நாங்கள்
இதை அசட்டுத்தனமாக எடுத்துக் கொள்ள முடியாது.
தற்போது, எச்சரிக்கையை அறிவித்திருப்பது சாதாரண நபர்கள் அல்ல. முகப்புத்தகத்தில்
எழுதுபவர் அல்ல. வெளிநாட்டு தூதரக காரியாலயங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் இது சம்பந்தமாக கூறியிருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.