Home இலங்கை அரசியல் வடக்கில் போர்க்காலத்தின் போது மீட்கப்பட்ட ஆபரணங்கள்- பொக்கிசங்கள் குறித்து விசாரணை

வடக்கில் போர்க்காலத்தின் போது மீட்கப்பட்ட ஆபரணங்கள்- பொக்கிசங்கள் குறித்து விசாரணை

0

வடக்கில் போர்க்கால நடவடிக்கைகளின் போது இலங்கை இராணுவத்தால் மீட்கப்பட்ட
ஏராளமான போர் ஆபரணங்கள் மற்றும் பொக்கிசங்கள் குறித்து விசாரணை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முகாம்கள், சட்டவிரோத வங்கி கட்டடங்கள் மற்றும்
பிற கட்டமைப்புகளில் இருந்து மீட்கப்பட்ட இந்தப் பொருட்கள் தற்போது  வரை
இராணுவப் புலனாய்வு இயக்குநரகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை

அவற்றை பகுப்பாய்வுக்காக தேசிய இரத்தினக் கல் மற்றும் நகைகள் ஆணையகத்துக்கு
அனுப்புமாறும், அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், கொழும்பு தலைமை
நீதிவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சுமார் 300 பொருட்கள் பகுப்பாய்வுக்காக அனுப்பப்படும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், பகுப்பாய்வைத் தொடர்ந்து, பொருட்களை பாதுகாப்பான சேமிப்புக்காக,
மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version