Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

0

கிளிநொச்சி(Kilinochchi) – தர்மபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று(13.06.2024) இடம்பெற்றுள்ளது.

குளவிக் கொட்டு

ஒரு சில நாட்களாக அதிக காற்று வீசி வரும் நிலையில் இன்றைய தினம்(13) குளவிக்கூடு ஒன்று கலைந்துள்ளது.

இதனால், குளவி கூட்டின் அருகில் இருந்த மாணவர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/wasp-attack-20-students-in-hospital-kilinochchi-1718264072

NO COMMENTS

Exit mobile version