Home இலங்கை சமூகம் நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு

நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு

0

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நீர்வெட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (07) காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா – எல , கட்டுநாயக்க, சீதுவை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தானை, மினுவாங்கொடை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version