Home இலங்கை அரசியல் வேட்பாளர் பட்டியல் வெளியானதும் யாரை ஆதரிப்பது என அறிவிப்போம் : செந்தில் தொண்டமான்

வேட்பாளர் பட்டியல் வெளியானதும் யாரை ஆதரிப்பது என அறிவிப்போம் : செந்தில் தொண்டமான்

0

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த
பின்னர் யார் இந்த நாட்டை முன்னேற்றக் கூடிய வாய்ப்பு இருக்கின்றதே அவருக்கு
வாக்களித்து எங்களது உரிமைகளை தக்கவைத்து மலையகத்தை மேலும் வளர்ச்சியடைய
தேவையான திட்டத்தை வைத்து முடிவெடுக்கும் என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை
தொழிலாளார் காங்கிரஸ் கட்சி தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஆளுநர் இல்லத்தில் இன்று(28.04.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர்
இவ்வாறு கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் இராணுவ புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலால் பெண்கள் உட்பட மூவர் அதிரடிக் கைது

புது கொள்கைகள்

மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை யாரும் பொறுப்பு எடுக்கதா நிலையில்
அவர் இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும் என மிகுந்த ஒரு முயற்சி எடுத்து அவர் இந்த
நாட்டை பொறுப்பு எடுக்கும் போது டொலர் ஒன்று 350 ரூபாவாக இருந்ததுடன் அரிசி
இல்லை, டீசல் இல்லை, சீனி இல்லை, வைத்தியசாலையில் மருந்து இல்லை இப்படி
இருந்தது

அவர் பொறுப்பு எடுத்த பின்னர் இன்று டொலர் 300 ரூபாவாகவும் எல்லோரும்
வாழக்கூடிய ஒரு நாடாக மாற்றி இருக்கின்றார்.

இவ்வாறு செயற்படுத்தி காட்டியுள்ள
இந்த தலைவரை நம்பி பின்னால் போகும் போது எதிர்வரும் 5 வருடத்தில் அதிகமாக
வளர்ச்சி அடைவதற்கான பக்குவம் அவரிடம் இருக்கின்றது.

என்னுடைய தனிப்பட்ட
கருத்து

அதைவிடுத்து ஒரு மாற்று முடிவுகள் எடுக்கும் போது அவர்கள் புது புது கொள்கைகள்
மாற்றும் போது மக்கள் மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சிக்குள் போகும்
வாய்ப்புக்கள் ஏற்படும் என்ற பெரிய அச்சம் இருக்கின்றது.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி : அரசாங்கம் அறிவிப்பு

வாக்களிக்க சந்தர்பம் 

ஜனநாயக நாட்டில் யாரும் வேட்பாளராக போட்டி போடலாம் இருந்தும் இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் கட்சியின் முடிவு என்னவென்றால் கடந்த 30 வருடத்துக்கு மேலாக
எல்லோரும் வாக்களிக்க சந்தர்பம் இருந்தபோதும் மலையக மக்கள் வாக்களிக்க
சந்தர்ப்பம் இல்லாமல் போயிருந்தது அத்துடன் ஒரு உரிமை இல்லாத மக்களாக இந்த நாட்டில் வாழ்ந்தோம்.

அதனால் எங்கள்
வாக்குகள் வந்து வீணடிக்காமல் யார் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றதே
யார் இந்த நாட்டை முன்னேற்றக் கூடிய வாய்ப்பு இருக்கின்றதே அவருக்கு
வாக்களித்து எங்களது உரிமைகளை தக்கவைத்து மலையகத்தை மேலும் வளர்ச்சியடைய
தேவையான திட்டத்தை வைத்து இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் முடிவெடுக்கும்.

ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்னர் தான் யாரை ஆதரிப்பதாக அறிக்கை
வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் தப்பியோட்டம்

கொழும்புக்கு வந்து சென்ற அமெரிக்க ஆய்வுக்கப்பல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version