கடந்த காலங்களில் ஜே.வி.பி(jvp) இந்தியாவிற்கு(india) எதிராக போராடிய போதும் தற்போது இந்தியா மாறிவிட்ட நிலையில் கோபப்பட வேண்டிய அவசியமில்லை என ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா(tilvin silva)தெரிவித்துள்ளார்
“நாங்கள் போராடினோம்.இப்போது அது முடிந்துவிட்டது. இப்போது நாம் நண்பர்களாக இருக்க வேண்டும்.அதுதான் அரசியல்’ என்றார்.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டை கொடுத்ததை நிரூபிக்குமாறு சவால்
தற்போதைய அரசாங்கம் நாட்டை இந்தியாவுக்கு காட்டிக்கொடுத்துள்ளது என எவரேனும் கூறினால் அதனை நிரூபிக்குமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.
இந்தியாவிற்கு சென்ற அநுர குமார
அநுரகுமார திஸாநாயக்க இந்தியா சென்று இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதாகவும், அங்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் இந்தியப் பிரதமர் இந்த நாட்டுக்கு வந்து இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதாகவும் அவர் கூறினார்.
you may like this
https://www.youtube.com/embed/eDbzSRaEzrA
