நாம் முன்னெடுத்துவரும் இணக்க அரசியல் பொறிமுறையூடாக தமிழ் மக்களின்
நலன்சார்ந்து பலவற்றை சாதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக
கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எமது தரப்பின்
முயற்சியின் காரணமாகவே 13 ஆவது திருத்தச் சட்டமும் இன்றுவரை
பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (15.10.2024) மேற்கொண்ட ஊடக
சந்திப்பின்தே அவர் இதனை கூறியள்ளார்.
இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
தமிழ் கட்சிகளின் செயற்பாடு
“கிடைத்திருக்கும் உரிமைகளையும் இல்லாமல் செய்யும் போக்கிலேயே சக தமிழ்
கட்சிகளின் செயற்பாடுகள் அமைந்து வருகின்றன
எம்மை பொறுத்தளவில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற
நிலைப்பாட்டுக்கமையவே எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இதேநேரம் இம்முதுறை ஈ.பி.டி.பி 7 தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கிய 10
மாவட்டங்களில் போட்டியிடுகின்றது.
அத்துடன் நடைபெறவுள்ள தேர்தல் என்பது தமிழ்
மக்களுக்கு மிக முக்கியமானது.
ஏனெனில் எவர் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கின்றார்கள்.
எவர் மக்களது
சேவகர்களாக இருந்து செயற்படுகின்றார்கள், எவர் சுயநலன்களுக்காக
செயற்படுகின்றார்கள் என்பதை மக்கள் நிர்ணயிக்கின்ற தேர்தலாக இது இருக்கின்றது.
ஏனெனில் மக்கள் தற்போது உண்மையை கண்டுகொண்டுவிட்டனர்” என்றார்.
காணொளி – தீபன்