அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள செல்வந்தர்கள் சிலர் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான அச்சமே இதற்கு காரணம் என குறித்த செல்வந்தர்களின் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.
மேலும், வெளிநாடுகளில் குடியேறுவதற்கான வாய்ப்புக்கள் தொடர்பாகவும் அமெரிக்காவின் செல்வந்தர்கள் ஆலோசனை நடத்துவதாக தெரியவந்துள்ளது.
ஆய்வு நிறுவனம்
அத்துடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவை விட்டு வெளியேறும் செல்வந்தர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 4 ஆண்டுகளில் வெளிநாடுகளில் குடியேற முயலும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 504 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
சொத்து வரி
ஐரோப்பிய நாடுகளான போர்த்துகல், மால்டா, ஸ்பெயின், கிரீஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் குடியேறுவதற்கே அதிகளவான அமெரிக்கர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அதிக வெற்றி வாய்ப்புள்ள கமலா ஹரிஸ், 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்து மதிப்பை கொண்டோருக்கு சொத்து வரி விதிக்க தீர்மானித்துள்ளார்.
அதுமட்டுமன்றி அமெரிக்காவில் நாளுக்கு நாள் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற காரணங்களாலேயே செல்வந்தர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.