Home இலங்கை சமூகம் நில்வலா கங்கையின் நீர் மட்டம் கடுமையாக உயர்வு

நில்வலா கங்கையின் நீர் மட்டம் கடுமையாக உயர்வு

0

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்  உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  நாட்டின் பல  பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக நில்வலா கங்கையின்  நீர் மட்டம் கடுமையாக உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு 

வெள்ளப் பெருக்கு ஏற்படும் அளவுக்கு நில்வலா கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நில்வலா ஆற்றின் நீர் மட்டம் தலகஹகொட பிரதேசத்தில் சிறு வெள்ள மட்டத்தை கடந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பானதுகம பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த சிறு வெள்ளம் தற்போது குறைந்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது..

இதேவேளை, வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில்  தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version