Home இலங்கை அரசியல் அநுரவின் இந்திய விஜயம் குறித்து வெளியான தகவல்

அநுரவின் இந்திய விஜயம் குறித்து வெளியான தகவல்

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) இந்திய விஜயம் குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கு (India) செல்வார் என விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், உறுதியான திகதி உள்ளிட்ட விடயங்கள் இதுவரையில் இறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவிற்கு பயணித்த ரணில் 

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் இதனை உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

இலங்கை – இந்திய இணைப்புத் திட்டங்களை அடிப்படையாக கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து இருதரப்பு பேச்சுக்களில் கலந்துரையாடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க கடந்த 21ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version