Home இலங்கை அதானி குழுமத்துடனான இலங்கையின் திட்டங்கள் குறித்து வெளியான தகவல்

அதானி குழுமத்துடனான இலங்கையின் திட்டங்கள் குறித்து வெளியான தகவல்

0

அதானி (Adani) குழுமத்திற்கு எதிரான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து உலக நாடுகள் அதன் திட்டங்கள் குறித்து ஆராய்ந்துவரும் நிலையில் இலங்கை அதானி குழுமத்தின் மீள்சக்தி திட்டங்கள் குறித்து இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மன்னார் பூநகரியில் அதானி குழுமத்தின் மீள்சக்தி திட்டங்கள் குறித்து ஆராய்ப்படுவதாகவும் எனினும் அவை குறித்து இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை எனவும் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தனுஸ்க பராகிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதி ரீதியான சாத்தியப்பாடு 

காற்றாலை மின் திட்டம் குறித்த யோசனைகள் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அதனை ஆராய்ந்து இறுதி முடிவை எடுக்கும், இந்த திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராயும் நிலையில் உள்ளோம், நிதி ரீதியான சாத்தியப்பாடு சூழல் பாதுகாப்பு குறித்தும் ஆராய்கின்றோம் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பாரிய திட்டங்கள் குறித்து பொறுப்புக்கூறல் அவசியம் என தெரிவித்துள்ள அவர் அதானி குழுமத்தின் நடவடிக்கைகளின் சர்வதேச கரிசனைகள் காரணமாக வெளிப்படை  தன்மை அவசியம் எனவும் கூறியுள்ளார்.   

  

NO COMMENTS

Exit mobile version