Home உலகம் இஸ்ரேலியர்களின் காரை மறித்து கத்தி குத்து! மேற்கு கரையில் பதற்றம்

இஸ்ரேலியர்களின் காரை மறித்து கத்தி குத்து! மேற்கு கரையில் பதற்றம்

0

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜெருசலேமின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பரபரப்பான சந்திப்பில் நடந்த இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்ததாக அந்நாட்டின் அவசர மீட்புப்பணி அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மோதல்களுக்கு காரணம் 

வாகனம் ஒன்றை மறித்து அதில் பயணித்தவர்களை நோக்கி மூவரால் நடத்தப்பட்ட என சந்தேகிக்கப்படும் இந்த திடீர் தாக்குதலில், தாக்குதல்தாரிகள் கத்திகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. 


Image Credit: France 24

காயமடைந்த மூவரும் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேற்கு கரை பகுதி, பெரும்பாலும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் இடமாக இருந்தாலும், அங்கு இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் அமைக்கப்பட்டுள்ளனர்.இதனால் இரு தரப்பினருக்குமிடையில் அடிக்கடி மோதல்கள் நிலவுகின்றதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் ஜனாதிபதி கண்டனம்

சமீபத்தில் இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் பாலஸ்தீனர்களைத் தாக்கிய சம்பவத்துக்குப் பிறகு, அதனை இஸ்ரேல் ஜனாதிபதியும் கடுமையாக கண்டித்திருந்தார்.

Image Credit: The Times of Israel  

இந்நிலையில் நடந்த இந்த புதிய தாக்குதல், பிராந்தியத்தில் தொடர்ந்துவரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதையடுத்து, சம்பவ இடத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version