Home இலங்கை அரசியல் தமிழ் மக்கள் தொடர்பில் பேசியவர்கள் இதுவரை சாதித்தது என்ன : சிறீரங்கேஸ்வரன் கேள்வி

தமிழ் மக்கள் தொடர்பில் பேசியவர்கள் இதுவரை சாதித்தது என்ன : சிறீரங்கேஸ்வரன் கேள்வி

0

புலிகளை மட்டுமே அழித்து பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்டேன் என மமதையுடன்
முழங்கிய சரத் பொன்சாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க சொல்லி தமிழ் மக்களின்
ஒற்றுமையை வெளியுலகுக்கு காட்டியதாக கூறிய தமிழ் தேசியம் பேசும் கட்சிகள்
அதனூடாக தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை சாதித்தது என்ன என ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வி
எழுப்பியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று  (19) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போலித்தேசியம் 

மேலும் கூறுகையில், ”தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்க காட்டுவதுதான எங்களது
விருப்பம். அது தான் பொது வேட்பாளர் விடயம் என புளொட் அமைப்பின் தலைவர்
தர்மலிங்கம் சித்தார்த்தன் சில தினங்களுக்கு முன்னர் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த சமயம்
அக்கட்சிகளின் தலைவர்களுக்குள் ஒற்றுமை எவ்வாறு இருந்தது? என்பதை மக்கள் நன்கு
அறிவார்கள்.

அச்சமயம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி தீவிரமான
போலித்தேசியம் பேசியிருந்தனர். அதன்பின்னர் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை
கொண்டிருந்த போது புளொட் அமைப்பும் அதில் அங்கம் வகித்திருந்தது.

தமிழ் மக்களின் வாக்குகள்

பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 நாடாளுமன்ற உறுப்பினர்களாக குறைவடைந்த
பின்னரும் அவர்களது ஒற்றுமையை சர்வதேசம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றது.

சமீபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட இந்தியத் தரப்பினரும் அதேபோன்று
பல நாடுகளின் இராஜதந்திரிகளும் கூட்டமைப்பின் ஒற்றுமைபற்றி பல்வேறு
கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளனர்.

சரத் பொன்சேகவுக்கு வாக்களிக்க சொன்னவர்கள் பின்னர் மைத்திரிக்கு வாக்களிக்க
சொன்னவர்கள் அதன்பின்னர் சஜித்துக்கு வாக்களிக்க சொன்னார்கள் இவ்வாறு
தொடர்ச்சியாக தமிழ் மக்களின் வாக்குகளை தமது நலன்களுக்காக பகடையாக்கி
வருகின்றனர்” என்றும் சிறீரங்கேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக தகவல் – கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version